படங்களை கீழே பார்க்கவும்

ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு தமிழ் மேல் உள்ள பற்று அனைவரும் அறிந்ததுதான் நாம் சொல்லப்போகும் விசயமும் பெரியது இல்லைதான் ஆனாலும் அதில் விசயம் உள்ளது.

தமிழ் தமிழன் என்று முழங்கும் ஏ.ஆர் அவர்கள் சமீபத்தில் செய்த விசயம் ஒன்றில் அவர் தமிழ் மீது கொண்டுள்ள பற்று மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சரி என்ன பிரச்சனை என்று பார்ப்போம் சில நாட்கள் முன்பு விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிம்பு கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரின் நண்பர்கள், அவரால் உயர்ந்தவர்கள், அவர் மதிப்பவர்களின் வாழ்த்துக்கள் ஒளிபரப்பப்பட்டது அதையடுத்துதான் ஏ.ஆர் அவர்கள் வழங்கிய வாழ்த்து செய்தியும் இடம் பெற்றது.

அந்த வாழ்த்து செய்தி ஒரு வாழ்த்து அட்டையில் அவர் சிம்புவுக்கு அனுப்பியிருந்தார்அந்த வாழ்த்து அட்டையில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் மட்டுமே வாழ்த்து எழுதி அனுப்பியிருக்கின்றார் அவர்.

ஒரு தமிழன் மற்றொழு தமிழனுக்கு அனுப்பும் வாழ்த்து செய்தி முழுக்க முழுக்க ஏன் ஆங்கிலத்தில் அனுப்ப வேண்டும் ஏன் தமிழில் வாழ்த்து சொல்ல வார்த்தைகள் இல்லையா என்று ஏ.ஆர் அவர்களை பார்த்து கேட்க தோன்றுகின்றது. 

இதில் எதேச்சையாக நடந்த விசயம் என்னவென்றால் ஏ.ஆர் அவர்களின் வாழ்த்து செய்தி வருவதற்கு முன் கொல்கத்தாவை சேர்த்த பாடகர் பாடும்பொழுது சிம்பு அவரிடம் வேறு மொழியில் இருந்து வந்து தமிழ் பேசுகின்றாய் ஆனால் தமிழன்தான் தமிழை ஆங்கிலம் கலந்து பேசுகின்றான் என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தமிழன் என்று பேசினால் மட்டும் போதாது வாழ்ந்து காட்ட வேண்டும் இது அனைவருக்கும் பொருந்தும்.

1

Picture 1 of 3

Leave a Reply