நீங்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கு செல்வதை புரிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் நிச்சயம் உண்மையான விடயம்தான்.

ரஜினியின் மகள் ஜஸ்வர்யா ஐ.நா சபையில் பரதம் ஆடியது ( அது பரதமா என்றதே சந்தேகம்தான் ) பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அவர் ஆடிய வீடியோவும் வெளியாகி பரபரப்பை உருவாக்கியிருந்தது. ஆனால் பின்புதான் அந்த நிகழ்ச்சி மற்றும் ஆட்டம் தொடர்பான உண்மைகள் வெளிவரத் துவங்கியது.

இதில்தான் மகிந்த ராஜபக்சவுக்கும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது

ரஜினியின் மகள் ஐ.நாவில் ஆடப்போகின்றார் என்ற செய்தி பல ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி பரபரப்பை உண்டாக்கியது. ஆம் ஐ.நாவில் ஆடுவது என்பது மிகச்சிறந்த கவுரவமாக பார்க்கப்படுகின்றது.
இதைப் போலவே உலகின் தலைசிறந்த யுனிவர்சிட்டியான ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் பேச்சாளராக அழைக்கப்படுவதும் அதைப்போன்ற கவுரவமான செயல்தான்.

அதிபராக இருந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச வீழ்ந்துவரும் தனது செல்வாக்கை தூக்கி நிறுத்த தீட்டப்பட்ட திட்டத்தின் விளைவாக தன்னை ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி சிறப்புரையாற்ற அழைப்பு விடுத்திருப்பதாக அறிவித்து லண்டன் வந்தார். ஆனால் புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பு காட்டியதால் ஆக்ஸ்போர்ட்  கவுன்சில் அவருக்கு பாதுகாப்பு தர முடியாது என்று அறிவித்தது.

அதை தொடர்ந்து பிரிட்டன் அரசிடம் முறையிட  அரசும் பாதுகாப்பு தரமுடியாது என கைவிரித்தது அதன் பின்பு விபரம் சேகரிக்க தொடங்கும் போது தெரியவந்தது மகிந்தவின் திட்டம்.

அதாவது மகிந்த ராஜபக்சவின் மகன் ஆக்ஸ்போர்டில் இருக்கும் ஒரு யுனிவர்சிட்டியில் படித்து வந்திருக்கின்றார்,அவரது மகன் அங்கு படிப்பதால் அந்த யுனிவர்சிட்டியில் மண்டபத்தை வாடகைக்கு அல்லது மாணவர்கள் என்பதால் சலுகைளில் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

அவர் சிங்கள மாணவர்கள் சிலருடன் இணைந்து ஏற்படுத்திய சிங்கள மாணவர் சமூக அமைப்பின் நிகழ்ச்சிக்கே வந்திருக்கின்றார். அவரை எந்த யுனிவர்சிட்டியும் அழைக்கவில்லை. அதனாலேயே அவருக்கு தனியார் நிகழ்ச்சிக்கு வந்த மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று பிரிட்டன் அரசு அறிவித்தது அதை அடுத்து அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்ய வேண்டும் என்று கவுன்சில் அறிவிக்க அதில் கூட உரையாற்ற முடியாமல் மகிந்த ராஜபக்ச அவமானத்துடன் வெளியேறினார்.

அந்தந்த நகரங்களில் உள்ள யுனிவர்சிட்டியில்  படிக்கும் எந்த மாணவர்களும் இத்தகைய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய முடியும்.

ஐஸ்வர்யா விடயத்திலும் நடந்தது இதுவே, அதாவது ஐ.நா சபையில் அங்கத்தவர்களா உள்ள இந்திய அதிகாரிகள் மட்டத்தில் உள்ளவர்கள் ஐ.நாவில் உள்ள ஒரு மண்டபத்தை வாடகைக்கு அல்லது சலுகைகளில் எடுத்து இந்தியா சார்பாக பெண்கள் தின நிகழ்ச்சி நடத்தியுள்ளார்கள்.

இதை நிகழ்வு நடந்த மண்டபத்தையும் வந்திருந்த 90 வீதமான இந்திய முகங்களையும் வைத்து சரி பார்க்கலாம். இது ஐ.நாவின் அதிகாரபூர்வமான நிகழ்ச்சி அல்ல ஆனால் ஐஸ்வர்யா ஐ.நாவில் ஆடப்போவதாக செய்தி வரவழைத்து ரஜினிக்கும் மகளுக்கும் எந்திரன் படத்திற்கும் புகழ் தேட முயற்சித்துள்ளார்கள்.

அது மட்டுமல்லாமல் ரஜினியை பா..க பக்கம் இழுக்க அவருக்கு வைக்கப்பட்ட ஐஸ்கட்டியாகவும் இருக்கலாம். இந்த அளவுக்கு முட்டாளா ரஜினி? இருக்காது என்றே நம்பலாம்.

ஆக முடிவில் ஐஸ்வர்யா ஆடியது ஆட்டமும் அல்ல அது ஐ.நாவும் அல்ல.

Leave a Reply