ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் “சாமி ஸ்கொயர்” படம் வேக வேகமாக தயாராகி வருகிறது . விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த 2003-ம் ஆண்டு வெளியான “சாமி” படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

முந்தைய படத்தின் தொடர்ச்சி என்பதால் சாமி 2-விலும் திரிஷா நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டது. திரிஷாவும் அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால், என்ன காரணத்தினாலோ படத்திலிருந்து விலகிக் கொண்டார். திரிஷாவின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இல்லாததே விலகலுக்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

எனவே, த்ரிஷாவுக்குப் பதில் அந்த வேடத்தில் நடிப்பது யார் என்ற கேள்வி நீடித்து வந்தது. இந்நிலையில், அந்த கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

பிரபு, பாபி சிம்ஹா, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ப்ரியன், வெங்கடேஷ் அங்குராஜ் இருவரும் ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.