சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் “விஸ்வாசம்” படத்தின் படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் திலீப் சுப்பராயன் மாஸ்டர் தலைமையில் அஜித் சம்பந்தப்பட்ட அதிபயங்கரமான, அதிரடியான சண்டை காட்சிகளை படமாக்கி வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த சண்டை காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.

சண்டை காட்சிகள் மட்டுமல்லாமல் படத்தின் முக்கிய சில காட்சிகளையும் இங்கு படமாக்கப்பட்டு வந்த நிலையில் கலைஞர் மு.கருணாநிதி காலமாக, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அஜித் நேற்று சென்னை வந்திருந்தார். கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கையோடு அஜித் ஹைதராபாத் பயணமாகி, இப்போது ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துடன் நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா முதலானோர் நடிக்க, டி.இமான் இசை அமைத்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.