பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான டீசரை நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிடுகிறார். கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் கமல் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக தேர்வானார்.

இந்நிலையில், பிக்பாஸ் 2 அடுத்தமாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் கமல், அடுத்த சீசனை தொகுத்து வழங்க மாட்டார் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அதற்கு மாறாக தனது அரசியல் பணிகளுக்கு இடையே பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை பிக்பாஸ் 2-ன் டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார். அதன் தொடர்ச்சியாக இரவு 7 மணி முதல் விஜய் டிவியில் இந்த டீசர் ஒளிபரப்பாக இருக்கிறது. முதல் சீசன் போலவே இரண்டவது சீசன் மிக பிரமாண்டமாக செட் அமைப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியா, ஜூலி, காயத்ரி ரகுராம், சக்தி, ஆரவ் போன்றோர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானார்கள். எனவே, இந்த இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளப் போகும் பிரபலங்கள் யார் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் மக்களிடையே அதிகமாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.