உலக சினிமாவை மிரட்டிய படங்கள் என்றால் அது ஒரு சில படங்கள் தான் அடங்கும் அந்த வகையில் அனைவரையும் மிகவும் கவர்ந்த படம் குரிப்பககுழந்தகளிடம் மிகவும் வரவேற்ப்பு பெற்ற படம் என்றால் அது என்று ஜூராசிக் பார்க் என்று தான் சொல்லலாம்.

ஹாலிவுட்டில் 1993-ல் தொடங்கிய டைனோசர்களின் ஆதிக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜூராசிக் பார்க் படத்தின் பல பாகங்கள் வெளிவந்து விட்டது. அவற்றில் சிலவற்றை ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் இயக்கி உள்ளார். சிலவற்றை தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில் அடுத்து வருகிறது ஜூராசிக் பார்க் : பாலன் கிங்டம். இதனை பயோனா இயக்கி உள்ளார். இவர் புகழ்பெற்ற ஏ மான்ஸ்டர் கால்ஸ், தி இம்பாசிபிள் படங்களை இயக்கியவர்.

ஜூராசிக் பார்க் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் கிரிஸ் ப்ராட், ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் இதிலும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் தவிர டெட் லெவின், டோனி ஜோன்ஸ் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். மைக்கேல் ஜிச்சினோ இசை அமைத்துள்ளார், ஆஸ்கர் பெரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அழிந்து வரும் டைனோசர் இனத்தை காக்க கிரிசும், டாலசும் போராடுகிறார்கள். இந்த முறை டைனோசருக்கு ஆபத்து டைனோசர் மூலமே வருகிறது. இன்ரோப்டர் என்ற கொடூர ராட்சத டைனோசர் தனது இனத்தை அழிக்கிறது. அதோடு மனித இனத்தை அழிக்க ஊருக்குள்ளும் வருகிறது. அதனை அப்படி அடக்குகிறார்கள் என்பது தான் படத்தின் கதை. 3டி, ஐநாக்ஸ் 3டி, 5டி, 7டி என அனைத்து தொழில்நுட்பத்திலும் வருகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழியிலும் டப் செய்யப்பட்டு வருகிற ஜூன் 7ந் தேதி வெளிவருகிறது.

Leave a Reply