‘எம்பிரான்’ படக்குழு மிகுந்த மனநிறைவுடன் மிக உற்சாகமாக காணப்படுகிறது. குறிப்பாக, தயாரிப்பாளர்கள் பி. பஞ்சவர்ணம் மற்றும் வி சுமலதா ஆகியோர், மிகச்சிறப்பான ட்ரைலரால் மிகவும் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் வி சுமலதா கூறும்போது, “ஒரு புதிய குழுவுடன் படத்துக்காக இணையும்போது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சூழ்நிலை உருவாகும். கதை விவரிப்பு மிகவும் அசாதாரணமானதாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட ‘குருட்டுத்தனமான வாய்ப்பு’ முறையில் பட வாய்ப்பை வழங்குவார்கள். ட்ரெய்லரை காணும் வரையில் இந்த நிலையில் தான் இருப்பார்கள். ஆனால் எம்பிரானை பொறுத்தவரையில், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நிச்சயம் கிடைக்கும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உறுதியாக இருந்தோம். ஆனால் மிகப்பெரிய ஆச்சரியம் டிரெய்லர் நாங்கள் எதிர்பார்த்தததை விட சிறப்பாக வந்திருக்கிறது. ஒருவேளை, இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக தெரியலாம், ஆனால் தயாரிப்பாளர்களாக எங்களுக்கு இது மிகவும் திருப்தி அளிக்கிறது” என்றார்.

இயக்குனர் கிருஷ்ணா பாண்டி கூறும்போது, “படம் இந்த அளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறது என்றால் அதற்கு தயாரிப்பாளர்கள் பஞ்சவர்ணம் சார் மற்றும் சுமலதா மேடம் தான் மிக முக்கிய காரணம். வழக்கமாக, ஒரு புதிய குழுவுடன் இணையும் போது, தயாரிப்பாளருக்கு பட உருவாக்கத்தின்போது சில சந்தேகங்கள் ஏற்படும். பின்னர் படப்பிடிப்புக்கு வந்து என்ன நடக்கிறது என்று அவ்வப்போது ஆய்வு செய்வார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது. அது தான் பேப்பரில் இருந்த திரைக்கதை அப்படியே திரையில் வர உதவியாக இருந்தது” என்றார்.

ட்ரைலர் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த டி. மனோஜ் (படத்தொகுப்பு), பிரசன் பாலா (இசை) மற்றும் எம். புகழேந்தி (ஒளிப்பதிவு) ஆகியோருக்கு நிபந்தனையற்ற நன்றி தெரிவிக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா.

ரெஜீத் மேனன், ராதிகா பிரீத்தி, பி. சந்திர மவுலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ், வள்ளியப்பன் மற்றும் இன்னும் சில நடிகர்கள் இந்த ரொமண்டிக் திரில்லர் படத்தில் நடித்திருக்கிறார்கள். இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு பற்றிய அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.