நடிகை தமன்னா மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தமன்னா. தமிழில் கல்லூரி, அயன், பையா, தர்மதுரை, பாகுபலி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் தமன்னா. தமன்னா நேற்று ஹைதராபாத்தின் ஹிம்யாத் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றை திறந்து வைத்தார்.

செருப்பு வீச்சு அப்போது அவரை பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமன்னா, ஜுவல்லரியில் இருந்து வெளியே வந்தபோது அங்கே நின்றிருந்த வாலிபர் ஒருவர் தமன்னாவை நோக்கி செருப்பை வீசினார். அந்த செருப்பு, அதிருஷ்டவசமாக தமன்னாவின் மீது படவில்லை. ஆனால் அருகில் நின்றிருந்த கடை ஊழியர் மீது விழுந்தது.

விசாரணை இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரும், ரசிகர்களும் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் கரிமுல்லா என்றும், முசீராபாத்தை சேர்ந்த இன்ஜினீயர் என்றும் தெரியவந்தது. செருப்பு வீச அவர் கூறிய காரணம்தான் இன்னும் அதிர்ச்சி.

நடிகைகளை இனி கடைதிறப்பு போன்ற விழாக்களுக்கு அழைக்க கூடாது அப்படி அவர்கள் வந்தால் தொடர்ந்து அவர்கள் மீது செருப்பு வீசுவேன் என்று அதிரடியாக தெரிவித்தார்.

நடிகைகளை காட்டி இளைஞர்களை சீரழித்து வருகின்றார்கள், அப்பாவி மக்களையும் நடிகைகளை விளம்பர பொருளாக்கி பெரு நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றார்கள் அனால்தான் செருப்பு வீசினேன் என அந்த நபர் தெரிவித்தார்.

ஆக இப்படி அவமானப்படுத்தப்பட்டால் எந்த நடிகையும் இனி கடை திறக்கவோ சிறப்பு விருந்தினர்களாகவோ வரமாட்டார்கள் என்றார்.

அட இவர் சொல்வது கூட சரிதானே

Advertisements

Leave a Reply