மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமான கௌதம் கார்த்திக்கின் கேரியரில் உருப்படியாக ஓடியது இரண்டு படங்கள் மட்டும் தான். “ஹரஹர மகாதேவ்கி”, “இருட்டு அறையில் முரட்டு குத்து” ஆகிய படங்கள் தான் அவருக்கு வசூல் ரீதியாக வெற்றியைக் கொடுத்தவை. “அடல்ட் காமெடி” படங்களான அவை, “ஹாஃப் பார்ன்” ரீதியில் இளைஞர்களைக் குஷியாக்கியது.

அதன் பிறகு வந்த “சந்திரமௌலி” திரைப்படம் இரண்டே நாளில் தியேட்டரை விட்டு தெறித்து ஓடியது. ஆனாலும் கௌதம் கார்த்திக் தன்னுடைய சம்பளத்தை 1 கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்தி இருக்கிறார்.

இதனால் அவரிடம் கதை சொல்லப் போன ஒன்றிரண்டு இளம் இயக்குநர்கள் கூட, “ஆளை விடுடா சாமி” என்று ஓட்டம் பிடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

கைவசம் புதிய பட வாய்ப்புகள் இல்லாததால், தற்போது சோர்ந்து போய் காணப்படுகிறாராம் நவரச நாயகனின் தவப் புதல்வன்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.