ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “ஜோக்கர்”. இப்படத்தில் குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்திருந்தார். இவருடைய நடிப்பு எல்லோராலும் வியந்து பாராட்டப்பட்டது. மேலும், இப்படத்தில் ரம்யா பாண்டியன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்திருந்தனர்.

“ஜோக்கர்” திரைப்படத்திற்குப் பிறகு, குரு சோமசுந்தரம் புதிய படமொன்றில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஜதின் இயக்கத்தில் காமெடி திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு “ஓடு ராஜா ஓடு” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்ததுள்ளன. இந்த படகின் ப்ரோமோ பாடல், பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை விஜய் சேதுபதி வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.