இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். திடீரென கதாநாயகனாக அவதாரம் எடுத்து, “டார்லிங்” படம் மூலம் அற்முகமானார். படம் சுமாரான வெற்றியைத் தரவே, “திரிஷா இல்லனா நயன்தாரா” திரைப்படம் இளைஞர்களிடத்தில் ஹீரோவாக கொண்டு சேர்த்தது. இந்த நம்பிக்கையில் அடுத்தடுத்து ஹீரோவாக நடிப்பதென்று முடிவு செய்தார்.

ஆனால், எதிர்பார்க்காத வகையில் அத்தனை படமும் சொதப்பு சொதப்பென்று சொதப்பின. இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்த “நாச்சியார்” படம் கூட அவருக்கு கை கொடுக்கவில்லை. அதை விடக் கொடுமை கடைசியாக வெளியான “செம” படம் இரண்டு நாள் கூட தியேட்டரில் ஓடவில்லை.

இவற்றை எல்லாம் பார்த்து நொந்து போயிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அடுத்து ஒரு வெற்றி படம் கொடுத்தால்தான் மரியாதை ருக்கும், இல்லை என்றால் யாரும் நம்மை கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதை தாமதாக புரிந்து கொண்டிருக்கிறார் அவர். மேலும், அதற்கான முயற்சியில் முழு நேரமும் ஈடுபட்டுள்ளது மட்டுமல்லாமல், ஒரு முக்கியமான முடிவையும் எடுத்திருக்கிறார் அவர்.

அதாவது, அடுத்து ஒரு பெரிய வெற்றியை கொடுக்கும் வரை, ‘கைப்பேசி’யை பயன்படுத்துவதில்லை.. என்று சபதம் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது வரை அவருடைய ‘கைப்பேசி’ அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.