படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் மலையாள நடிகர் ஜெயசூர்யா, தற்போது தனது ஆஸ்தான இயக்குனரான ரஞ்சித் சங்கரின் டைரக்சனில் ‘ஞான் மேரிக்குட்டி’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டரில் ஜெயசூர்யா நடித்திருக்கிறார்.

சமீப நாட்களாக இவர் திருநங்கை வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திருநங்கைகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் ஐந்து பேரை மேடைக்கு அழைத்து இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட வைத்தனர் படக்குழுவினர்.

Leave a Reply