“திண்ணையில் படுத்திருந்தவனுக்கு திடுக்குணு வந்துச்சாம் கல்யாணம்” என்பதற்கேற்ப திடீரென்று பிரபலமானவர் ஜூலியானா. “சின்னம்மா, சின்னம்மா” என ரைமிங் மற்றும் டைமிங்கோடு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கூச்சல் போட்டு “வீரத் தமிழச்சி” ஆனவரை, அலேக்காகத் தூக்கி “பிக் பாஸ்” நிகழ்ச்சிக்குள் அடைத்து முடிந்த வரை டேமேஜ் செய்து அனுப்பி வைத்தார்கள்.

அங்கிருந்து வெளியே வந்தவரை சில சினிமாக் கம்பெனிகள் மொய்க்க, அம்மணி இப்போது ஹீரோயினாகி விட்டார். அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில், அவர் கார் ஓட்டுவதைப் போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,

“A long drive with my bestie #markhamran in the #BMW….. #relaxing” என்று பதிவு செய்திருந்தார். ஆனால் உண்மையில் அந்த புகைப்படம் நின்று கொண்டிருந்த காரிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. இதனால் வெறுப்பான நெட்டிசன்கள் ஜூலியை சகட்டு மேனிக்கு கலாய்த்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.