நடிகை கஸ்தூரி கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் கொட்டி வைக்கும் வலதுசாரித் தனமான பேச்சுக்களுக்கு அவ்வப்போது நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது வழக்கம். அதுபோல சமீபத்தில், “wet and topless” போட்டோவை வெளியிடப் போகிறேன் என சொல்லி மகன் போட்டோவை வெளியிட்டார். மகன் போட்டோவை வெளியிடுவதற்கு இப்படி சில்லறைத்தனமான விளம்பரம் தேவையா? என நெட்டிசன்கள் வாட்டி எடுத்தார்கள்.

இந்நிலையில் முதுகு மொத்தமும் தெரியும் படியாக தான் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டு, “இது யார் என்று கண்டுபிடியுங்கள்” என்று கேட்டுள்ளார்.

வழக்கம்போல கடுப்பான நெட்டிசன்ஸ், இந்த வயதில் இப்படி ஒரு உடை தேவையா? இந்த பதிவு தேவையா? என மோசமாக திட்டி வருகின்றனர். நடிகை கஸ்தூரி “தமிழ்ப்படம் 2” வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார், அந்த சூட்டிங்கின் போது எடுத்த போட்டோவை இப்போது பதிவு செய்து தேவையில்லாமல் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.