தமிழ் சினிமா இதுவரை பல ஹீரோயின்களை கண்டுள்ளது. அதில் பலரும் பல வருடம் கொடிக்கட்டி பறந்துள்ளனர். ஒரு சில இருந்த இடம் கூட தெரியாமலும் போய் உள்ளனர், அப்படி பத்தோடு பதினொன்றாக நாம் இருக்க கூடாது என்பதே பல நாயகிகளின் விருப்பம்.

அப்படி ஒரு சில ஹீரோயின்கள் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஒரு சில வருடங்களிலேயே உச்சத்தை தொட்டுவிடுவார்கள். அந்த வகையில் ரஜினிமுருகன், பைரவா, தானா சேர்ந்த கூட்டம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து உச்சத்தை தொட்டவர் கீர்த்தி சுரேஷ்.

ஆனால், இதற்காக அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடவில்லை, மாற்றாக கேலிகளையும், கிண்டல்களையும் தான் அள்ளி வீசியது.

அதிலும் குறிப்பாக தொடரி படத்திற்கு அவருக்கு கிடைத்த விமர்சனங்கள் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, அவர் சிரிப்பதை வைத்து பல ஆயிரம் மீம்ஸ். அவர் ரியாக்‌ஷன் வைத்து இன்னும் ஆயிரம் மீம்ஸ், இப்படி திரும்பிய பக்கம் எல்லாம் கீர்த்திக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது. ஒரு நடிகையாக அவர் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பயணித்தாலும், சமூக வலைத்தளங்களில் ஒரு கேலி நடிகையாகவே அவர் பார்க்கப்பட்டார். ஒரு விருது விழா மேடையில் கூட தொடரி படத்தில் காட்டிய ரியாக்‌ஷனை காட்டுங்கள் என கூற, அவர் கொஞ்சமும் தயங்காமல் அப்படியே செய்து காட்டினார் வெகுளியாக.

இதற்கெல்லாம் அவர் ஒரு நாளும் பதில் சொன்னதே இல்லை, ஆனால், சத்தமில்லாமல் மகாநதி அதாவது நடிகையர் திலகம் படத்தில் கமிட் ஆனார். இவர் சாவித்ரி அவர்களின் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்றவுடவே மீண்டும் மீம் கிரியேட்டர்களுக்கு செம்ம தீனி என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், கேலியும், கிண்டலையும் வீசிய அத்தனை மீம் கிரியேட்டர்களுமே இன்று கீர்த்தியின் புகழ்பாடி வருகின்றனர், இது தான் வளர்ச்சி.

அதென்ன சரித்திர நாயகி ஒரு படம் தானே இப்படி நடித்தார் என்று கேட்கலாம், கண்டிப்பாக ஏற்றுக்கொள்கின்றோம், ஆனால் சரித்திர நாயகி சாவித்ரியின் கதாபாத்திரத்தை இதை விட யாரும் நன்றாக செய்திருக்க முடியாது என்ற அனைவரும் கூற, பின் இந்த சரித்திர நிகழ்வில் கீர்த்தியும் பெரும் பங்காக இணைந்திருக்க, அப்படி சொல்வதில் என்ன தவறு. யார் என்ன சொன்னால் என்ன, உன் வேலையை சரியாக நீ பார், உனக்கான இடம் தானாக தேடி வரும் என்பதே கீர்த்தி தன் திரைப்பயணத்தின் மூலம் நமக்கெல்லாம் சொல்லும் ஒரு பாடம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.