“பெண்களே… தாய்ப்பாலின் முக்கியத்துவத்தைக் கேரளாவில் பறைசாற்றுங்கள். தாய்ப்பால் கொடுப்பதை உற்று நோக்க வேண்டாம்…” என்று அந்த அட்டைப்படத்தின் கீழ் எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஜிலு ஜோசப் ‘தாய்ப்பால் கொடுப்பது இயல்பான நிகழ்வு. வார இதழின் அட்டைப்படத்தில் நான் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படம் வெளியாவதை என் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. வேண்டாம் என்று கூறினர். இது என் உடல். எனக்கு முழு சுதந்திரம் உள்ளது. தாய்ப்பால் கொடுப்பது வரம். பொது இடங்களில் தாய்ப்பால் கொடுப்பதை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களின் கண்களில்தான் பிழை உள்ளது. கிரகலட்சுமி பத்திரிகை இதுகுறித்து என்னிடம் கேட்டபோது நான் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கிரகலட்சுமி வார இதழின் அட்டைப்படத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் என இரு விதமான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. சமூக வலைதளத்தில் ‘இது துணிச்சலான முயற்சி’ என்று ஒரு சாராரும், ‘இது விளம்பரத்துக்காகச் செய்த தேவையில்லாத முயற்சி’ என்று ஒரு சாராரும் கருத்து பதிந்து வருகின்றனர்.

`திருமணமானப் பெண்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஒரு பிம்பம் உள்ளது. அதை நியாயப்படுத்தும் வகையில் ஜிலு ஜோசப் குங்குமம் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளதைத் தவிர்த்திருக்கலாம்’ என்று பெண்களில் ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலான விமர்சனங்கள் ஜிலு ஜோசப்பை பாராட்டி பதிவு செய்யப்பட்டுள்ளன.

கிரிகலட்சுமி என்னும் மலையாள வார இதழ், பெண் தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை அட்டைப்படமாக்கி பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அந்த அட்டைப்படத்தில் இருப்பது மலையாள எழுத்தாளர் ஜிலு ஜோசப். 

ஆனாலும் இது பொதுநலம் சார்ந்தது என நீங்கள் குறிப்பிட்டாலும் பணம் கொடுக்காமல் இந்த சேவைக்கு நீங்கள் ஒப்புக்கொண்டிருப்பீர்களா என்ற கேள்வியை சமூக தளங்களில் பலர் கேட்டுள்ளார்கள்.

Leave a Reply