“பிக்பாஸ்” இரண்டாம் சீசன் தொடக்கத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது மமதி சாரியின் வெளியேற்றம். பொதுவாக “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் போட்டியாளர்களை வெளியேற்றுவது சகஜம் தான் என்றாலும், மமதி சாரியின் வெளியேற்றம் என்பது பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எலிமினேசனுக்குப் பிறகு வார இதழ் ஒன்றிற்கு அளித்திருக்கும் பேட்டியில், தான் வெளியேற்றப்பட்டது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

“இந்தப் போட்டியின் அடிப்படையே, ‘ஸ்ட்ராங்கான போட்டியாளரை வெளியேற்றணும்’ என்பதுதான். என்னால யாருக்கு என்ன கெடுதல் வந்துச்சு? நான் செஞ்ச ஒரு தவறைச் சொல்லுங்க? நான் கோபப்பட்டு யார்கிட்டயும் பேசலை; மத்தவங்க மனசு புண்படும்படியாவும் நடந்துக்கலை.

உடை அணியிறது அவரவர் விருப்பம். ஆனா, நிறைய பார்வையாளர்கள் பார்க்கிறதால, உடை விஷயத்தில் கட்டுப்பாடுகள் இருக்கணும். அதை ஏத்துக்கிறேன். குறிப்பா, என் மனைவிக்குப் பிடிச்ச மாதிரி அன்பா நடந்துப்பேன் என்று ஆரம்பத்தில் எங்கிட்டச் சொன்னார், பாலாஜி.

மாற்றத்தை வெறும் வார்த்தையாகச் சொல்லாம, செயல்ல காட்டுங்க என்று சொன்னேன். அவர் சொன்னபடி நாலு நாளைக்கு மேல நடந்துக்கலை. நித்யா வருத்தப்படும்படி பல நேரங்கள்ல நடந்துக்கிட்டார். அவர் பயன்படுத்தின வார்த்தைகளும் தவறானது. அதனால, நிச்சயம் பாலாஜியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவர் செய்ற தவறுகளை கமல்ஹாசன் அவர்கள் உணர வைப்பார் என்று நித்யாகிட்ட சொன்னேன். அதுவும் நடந்துச்சு. மஹத்தும் பல நேரங்கள்ல தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அதனாலதான் அவர் பெயரை நான் எலிமினேஷன்ல சொன்னேன்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.