தமிழ் சினிமாவின் ஆச்சர்யம் என்றால் அது டி.ராஜேந்தர் தான். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தையும் தனி ஒருவனாக இருந்து செய்து முடிப்பதே அதற்குக் காரணம்.

காலப்போக்கில் அவரது படங்கள் “ட்ரெண்ட்” என்னும் அரக்கனின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. அவரால் காலத்திற்கேற்ப படங்களை இயக்க முடியாமல் போனது. அதற்கான சிறந்த உதாரணம் “வீராச்சாமி”. அவரே ஹீரோவாக நடித்த அந்தப் படத்தில், மும்தாஜ் ஹீரோயினாக நடித்தார். படம் படுதோல்வி அடைந்தது.

இதனால் அதன்பிறகு படம் எதையும் இயக்காத டி.ராஜேந்தர் சில படங்களில் நடித்தும், சில படங்களில் பாடல்கள் பாடியும் வந்தார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார் டி.ராஜேந்தர். இந்தப் படத்தில் நடிகை நமீதா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களோடு ராதாரவி, இளவரசன், விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாப் என ஏகப்பட்ட பேர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தையும் டி.ராஜேந்தரே செய்யப் போகிறார். “சிம்பு சினி ஆர்ட்ஸ்” தயாரிக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.