பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரொமோ வெளியாகியுள்ளது. அதில், கவின் மற்றும் லாஸ்லியாவைப் பார்த்து நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்கு ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் தர்ஷன். பிக் பாஸ் வீட்டில் ஒரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த வாரம்…

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரொமோ வெளியாகியுள்ளது. அதில், கவின் மற்றும் லாஸ்லியாவைப் பார்த்து நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்கு ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் தர்ஷன். பிக் பாஸ் வீட்டில் ஒரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த வாரம் காதல் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. திரும்பவும் கவின், சாக்‌ஷி மற்றும் லாஸ்லியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய மொட்டை கடுதாசி டாஸ்க் மூலம் இதனை துவக்கி வைத்ததே பிக் பாஸ் தான். ஆளாளுக்கு எங்கள் பக்க விளக்கத்தை நாங்கள் தர்றோம் என பிக் பாஸுக்கு மாறி மாறி கண்டெண்ட் கொடுத்தார்கள்.

வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் எல்லாம் பேசுவதைப் பார்த்தால், சாக்‌ஷி பக்கம்தான் நியாயம் இருக்கும் எனத் தோன்றுகிறது. வீட்டில் நடுநிலையாளர்களாக கருதப்படும் தர்ஷன், சரவணன் மற்றும் ரேஷ்மாவும் சாக்‌ஷிக்கு ஆதரவாகவே இதில் பேசுகின்றனர். லாஸ்லியா அமைதியாக சோகமாக அமர்ந்திருப்பது போல் காட்டுகிறார்கள்.

2 மணிக்கு என்ன பிரண்ட் ஷிப் வேண்டிக் கிடக்குது?’ என லாஸ்லியாவை உரிமையுடன் கண்டிக்கிறார் தர்ஷன். பிக் பாஸ் வீட்டில் தர்ஷனை தனது சகோதரன் என்றே குறிப்பிட்டு வருகிறார் லாஸ்லியா. ஏற்கனவே ஷெரின் தர்ஷனுக்காக இதய வடிவ சப்பாத்தி போட்ட சம்பவத்தில் இதே போல் தான் அதிக உரிமையுடன் நடந்து கொண்டார் லாஸ்லியா.

சரவணனும், ரேஷ்மாவும் கூட இந்த விவகாரத்தில் கவினைக் கடிந்து கொண்டுள்ளனர். சாக்‌ஷியுடன் பிரேக் அப் ஆன உடனேயே இப்படி லாஸ்லியாவுடன் கவின் நெருக்கமாகப் பழகுவது நன்றாக இல்லை என அவர்கள் கூறுகின்றனர். இதைப் பார்க்கும் போது, லாஸ்லியா முதல் புரொமோவில் சொன்னது போல், அவர் மீது தான் தவறோ என்ற சந்தேகம் நமக்குமே வருகிறது.

Website:
  • Social Links:

Leave a Reply