நடிகை நிவேதா பெத்துராஜுக்கு இனி ஏறுமுகம் தான். கடைசியாக ஜெம் ரவியுடன் நடித்த “டிக் டிக் டிக்” திரைப்படம் செம்ம கலெக்‌ஷன், அதோடு அம்மணிக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. அந்த உத்வேகத்தில் தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும், விஜய் ஆண்டனி ஜோடியாக “திமிரு பிடிச்சவன்”, பிரபுதேவா ஜோடியாக “பொன் மாணிக்கவேல்” படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏ.சி.முகில் இயக்கும் “பொன் மாணிக்கவேல்” படம் பற்றி பேசியுள்ள நிவேதா பெத்துராஜ்,

“நான் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில், இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு பிரபுதேவாவின் மனைவி கதாபாத்திரம். பிரபுதேவாவுடன் இணைந்து நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதனை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன்” என்றார். இந்தப் படத்தையும் “டிக் டிக் டிக்” படத்தை தயாரித்த ஹித்தேஷ் ஜபக் மற்றும் நேமிசந்த் ஜபக் ஆகியோர் தான் தயாரிக்கின்றனர்.

இந்த இரண்டு தமிழ்ப் படங்களும் வெளியான பின், நிச்சயமாக தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரலாம் என காத்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.