கடந்த ஜூன் மாதம், மும்பையில் நடைபெற்ற தொழிலதிபர் அனில் அம்பானியின் மகனது நிச்சயதார்த்த நிகழ்ச்சி பயங்கர பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அனைவரது கண்களும் மணமக்களைத் தாண்டி பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவையே மொய்த்தன. காரணம், பிரியங்கா சோப்ரா தனது பாய் ஃப்பிரெண்ட் நிக் ஜோனாஸ் உடன் ஜோடியாக வந்திருந்தது தான்.

இந்தி படங்களில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அங்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனிடையே, அமெரிக்காவின் பிரபல பாடகரான நிக் ஜோனாஸ் (25) என்பவருடன் பிரியங்கா சோப்ரா நெருக்கமாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜோடியாகவும் பங்கேற்று வந்தனர்.

இந்நிலையில், இருவருக்கும் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரியங்கா சோப்ரா சில நாட்களுக்கு முன்பு நிக் ஜோனாஸுடன் மும்பை வந்து தனது தாயாரை சந்தித்து ஆசிபெற்றதாக தெரிகிறது. எனினும், இதனை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனாஸ் தரப்பும் உறுதி செய்யவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.