இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ராகுல் காந்தி,
““மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் பா.இரஞ்சித்த நேற்று டெல்லியில் சந்தித்தேன். அவருடன் நடிகர் கலையரசனையும் சந்தித்தேன். சமூகம், அரசியல் மற்றும் சினிமா குறித்து பேசினோம். அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது” என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின் போது, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரம் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என ராகுல் கூறியதாக இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.