ரகுல்பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் பிஸியாக இருக்கிற ஒரு நடிகை. அவர் தமிழில் தற்போது சூர்யா ஜோடியாக “என். ஜி.கே” படத்திலும், “இன்று நேற்று நாளை” இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகவும், கார்த்தி ஜோடியாக “தேவ்” படத்திலும் நடித்து வருகிறார்.

“என்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை. நல்லவராகவும் என்னை மிகவும் நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். நான் 5.9 அடி உயரம் இருக்கிறேன். எனவே அவர் குறைந்தது 6 அடி உயரம் இருக்க வேண்டும்” என்று சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் சினிமாத்துறையில் தற்போது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவது ஏன்? என கேட்கப்பட்ட கேள்விக்கு,

“நான் அப்படி நினைக்கவில்லை. எங்கள் துறையில் எல்லோருமே நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.