“இரும்புத்திரை” படம் வெற்றி பெற்றதை அடுத்து, சூட்டோடு சூடாக அடுத்த படத்தையும் ரிலீஸ் செய்து விட முனைப்பு காட்டி வருகிறார் நடிகர், தயாரிப்பாளர் விஷால்.

அந்த வகையில், தற்போது லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் “சண்டக்கோழி 2” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தை தனது, “ஃபிலிம் பேக்டரி நிறுவனம்” மூலம் விஷாலே தயாரித்து நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்போது வருகிற திரைப்படங்கள் எல்லாம் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. அந்த வகையில் ஏற்கனவே “இரும்புத் திரை” படமும் தன்னிச்சையாக வெளியானதாக சர்ச்சை கிளம்பியது. அதே போல் இந்த முறையும் “சண்டக்கோழி 2” படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக புகைச்சல் கிளம்பியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் தான் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.