விளையாட்டு, சினிமா மற்றும் அரசியல் போன்றவற்றில் சாதிக்கின்றவர்களைப் பற்றி திரைப்படங்கள் உருவாக்குவது அதிகரித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் டோனி மற்றும் சச்சின் ஆகியோரது வாழ்க்கை திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை திரைப்படமும் மிகப்பெரிய வசூலை ஈட்டியது. இதனால் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்திய பேட்மிண்டன் வீராஙகனை பி.வி.சிந்து, சாய்னா நோவல், கிரிக்கெட் வீரர் கபில் தேவ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரது வாழ்க்கையும் திரைப்படமாக உருவாக உள்ளது.

இதில் சானியா மிர்சாவின் வாழ்க்கை திரைப்படத்தில் அவரது வேடத்தில் டாப்ஸியை நடிக்க வைக்க ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சானியா மிர்சாவையே நடிக்க வைக்க இயக்குநர் முடிவு செய்திருக்கிறாராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.