இருப்பதை விட்டு, பறக்க நினைத்தால் என்னவாகும் என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகர் சந்தானம். வடிவேலு புயல் ஓய்ந்த பிறகு, சந்தானம் தான் கோலிவுட்டின் காமெடி சூப்பர் ஸ்டார். ஒரு காமெடி நடிகராக இருந்து கொண்டு கோடி கோடியாக சம்பாதித்து கொண்டிருந்த சந்தானம், “மயிலைப் பார்த்து ஆசைப்பட்ட வான்கோழி” கதையாக சிவகார்த்திகேயனைப் பார்த்து, கதாநாயனாக மட்டும் தான் நடிப்பேன் என அடம்பிடித்தார்.
விளைவு?, வரிசையாக அவரது படங்கள் காலியானது. “கண்ணா லட்டு திண்ண ஆசையா” படத்தைத் தவிர அனைத்துமே அவுட்.
இதனால் பெரும் பொருளாதாரச் சிக்கலை சந்தித்துள்ள அவருக்கு, படப்பிடிப்பு முடிந்து ரிலிஸிற்கு தயாராக இருக்கும் படங்களை வெளியிடுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. அந்த வகையில், சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் “சர்வர் சுந்தரம்” படம் இந்த வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
இப்படி வரிசையாக தனது படங்கள் சிக்கல்களை சந்தித்து வருவதால் சந்தானம் ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.