போர்னோகிராஃபி படங்கள் மூலம் பச்சப்புள்ளைங்க தொடங்கி பல்லுப்போன கிழடுவரை வெகு பிரபலமான நடிகை சன்னி லியோன். அதெல்லாம் கசப்பான அனுபவங்கள் என்று சொல்லிவிட்டு பாலிவுட் சினிமாவுக்கு வந்தவர், தமிழில் வெளிவந்த ‘வடகறி’படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு ஆடியிருக்கிறார். தவிர, தெலுங்கு இன்னபிற மொழிகளிலும் இவரது ஆட்டம் பிரபலம்.

ஒத்தப்பாட்டுக்கு ஆடினவரை ஒட்டுமொத்த சினிமாவிலும் திறமைக்காட்ட சன்னி லியோனை தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் வி.சி.வடிவுடையான். இவர் இயக்கி சமீபத்தில் வந்த படத்தில் ஆவிகளே ‘அட்டகாசம்’ செய்வதுபோல் காட்சி வைத்திருந்தார். சன்னி லியோன் நடிக்கும் ‘வீரமாதேவி’யில் அந்த மாதிரியான காட்சிகள் இல்லை.

சதையைக் காட்டி நடித்தவருக்கு கதை உள்ள படம் என்றால் விடுவாரா முழுக்க வரலாற்றுப் பின்னணியில் நடக்கிற கதை என்பதால்  ஒப்புக்கொண்யிருக்கிறார் சன்னிலியோன். இது அவரது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுக்கிற செய்திதான்! இதைவிட அதிர்ச்சியான செய்திதான் தலைப்பில் சொல்லப்பட்ட சங்கதி!! ‘வீரமாதேவி’ ட்ரைலர் ஷூட் சமீபத்தில் சென்னையில் நடந்தது.

வெளிநாட்டு நடிகையாச்சே… சாப்பாடு விஷயத்தில் அசத்திப்பிடணும் என்று புரொடக்சன் ஆட்களிடம் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அவர்களும் சென்னையில் கிடைக்கும் ஸ்பெஷல் நான்வெஜ் ஐட்டங்களைத் தேடிப்பிடித்து வாங்கிவந்து கொடுத்திருக்கிறார்கள்.

வெஜ் ஐட்டங்கள் என்ன கிடைக்கும் எனக் கேட்டிருக்கிறார் சன்னிலியோன். இருக்கிற எல்லா வெஜ் ஹோட்டலிலும் ஒவ்வொரு ஐட்டமாக இறக்கியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் டேஸ்ட் பார்த்துவிட்டு கடைசியாக சரவணபவன் ஹோட்டலை டிக் அடித்திருக்கிறார் சன்னிலியோன். கூடவே, என் வாழ்நாளில் இப்படியொரு உணவை சாப்பிட்டதே இல்லை என்று பாரட்டினாராம்.

அப்புறமென்ன…படப்பிடிப்பு நடந்த ஐந்து நாட்களும் அண்ணாச்சி ஹோட்டல் சாப்பாடுதான். படப்பிடிப்பு முடிவதற்குள் சரவணபவன் வெரைட்டி அத்தனையும் ஒரு கை பார்த்துவிடுவதென்று முடிவெடுத்திருக்கிறாராம். சன்னிலியோன் என்றாலே ‘பியூர் நான்வெஜ்’ என்று நம்பும் ரசிகர்கள் பாவம்!

Leave a Reply