ஜெயலலிதா இருந்தபோது வழங்க முடியாத தீர்ப்பை தங்களுடைய கட்டளைக்கு அடிபணியாது துணிச்சலாத எதிர்த்த சசிகலாவை துரோகத்தின் ஊடாக வீழ்த்தியிருக்கின்றது தமிழின விரோதிகள், ஆண்மையற்ற துரோகிகள்.
 
வழங்கிய தீர்ப்பு ஜெயலலிதாவை முதன்மை குற்றவாளியாக்கி தீர்ப்பு வந்துள்ளது ஆனால் பன்னீர்செல்வம் அணி வெடி வெடித்து ஜெயலலிதாவின் மேல் கொண்ட விசுவாசத்தை வெளிக்காட்டியுள்ளார்கள்.
 
இப்பொழுது மறைந்த ஜெயலலிதா இனி எப்பொழுதும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிதான் ஒரு உண்மையான தொண்டன் என்றால் தனக்கு வாழ்வழித்தவரை மரணித்த பின்பும் களங்கமற்றவராக காட்டப்படுவதை தடுக்கவே பாடுபடுவான் ஆனால் சசிகலாவை வீழ்த்த ஜெயலலிதாவின் பெயரை கெடுத்தாவது தனது பதவியை காப்பாற்ற வேண்டும் என்ற பன்னீர்செல்வம் எடுத்த வழி அருவருக்கத்தக்கது.
அதற்காக இங்கு ஜெயலலிதா நல்லவர் சசிகலா குற்றமற்றவர் என்று கூறவரவில்லை
அம்மா அம்மா என்று வாய் கிழிய அழைத்த பன்னீர்செல்வம், அம்மாவையே பார்த்திராமல் பாசம் கொட்டும் தீபா எல்லாம் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதாக அறிவித்துள்ளது கீழ்த்தரமான அருவருக்கத்தக்க செயல் அன்றி வேறில்லை.
சசிகலாவை பழிவாங்குவதற்காக வரலாற்றில் இருந்து அழியாத தீராத அவமானத்தை ஜெயலலிதாவிற்கு வழங்கிவிட்டார்கள் ஆனால் பன்னீர்செல்வம் நிச்சயம் முதல்வராக மாட்டார் ஒரு வேளை ஆனாலும் அது நிச்சயம் சில மாதங்களில் கவிழ்க்கப்படும்.

சசிகலாவை பழிவாங்குவதற்கு அல்லது வீழ்த்துவதற்கு வேறு வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம். அனைவரையும் நல்லவர்கள் என்று சொல்லிவிடமுடியாதுதான்.

முதல்வர் பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டிய தீபா! நடுவில் தீபா ஓரத்தில் பன்னீர்செல்வம்

ஆனால் 20 வருடங்களுக்கு மேல் கடந்த வழக்கை திடீரென தீர்ப்பு கூற வைத்து பழிதீர்த்துக்கொண்டார்கள். இந்த வழக்கை போல் ஏனைய வழக்குகளுக்கும் தீர்ப்பு வழங்குவார்களா இந்த உத்தமர்கள்?  பன்னீர்செல்வம்தான் இந்த தீர்ப்பை கொண்டுவந்தார் என்று கூறிவிடமுடியாதுதான் ஆனால் நிச்சயம் அவருக்கும் பங்கு இருக்கின்றது.

பன்னீர்செல்வம் ஒரு முதலமைச்சர் ஆனால் இன்று தீபாவை சரிசமமாக நடத்துவதும் அவருக்கு முன்னால் கைகட்டி, முதுகுவளைந்து கும்பிடு போட்டு நிற்பதும் மிகவும் அருவருக்கத்தக்க செயலே. பன்னீருக்கு முதல்வராக மக்கள் அங்கீகாரம் வழங்குகின்றார்கள் என்றால் அது தீபாவிற்கு கும்பிடு போடுவதற்காகவா? இவர் முதல்வர், இந்த தீபா யார்? கவுன்சிலரா? எம்.எல்.ஏவா? எம்.பியா? யார்? எம்.ஜீஆர் காலத்து அரசியல்வாதிகள் கூட கும்பிடு போடுவது மிக அருவருக்கத்தக்கது

உண்மையில் இவர்கள் யாருக்கு கும்பிடு போடுகின்றார்கள்? ஜெயலலிதாவுக்கு என்றால் அவர் கல்லரை நேராகவல்லவா இருக்கின்றது. தீபா பக்கம் திரும்பி என்ன செய்கின்றார்கள்?

இவரு என்னய்யா குடுக்கிறவங்க எல்லார்கிட்டயும் பதிலே சொல்லாமல் வாங்கி வாங்கி வைத்து பழைய பேப்பர் கடையேதும் வைக்கப்போகின்றாரா?

Leave a Reply