சீமான் அவர்களின் வரவு அடித்தளம் எல்லாமே தமிழீழ விடுதலையும், தமிழீழ விடுதலைப்புலிகளுமே, இந்த இரண்டில் எதில் சறுக்கினாலும் அவர் வீழ்ந்து காணாமல் போவது நிச்சயம்.

ஆனால் அது அப்பொழுது, இப்பொழுது அப்படியில்லை என்னை அதை வைத்து வீழ்த்த முடியாது என்ற என்னம் வந்துவிட்டதோ என்று என்னத் தோன்றுகின்றது.

கொள்கை என்றால் அதற்காக எதையும் இழக்க வேண்டும், கொள்கைக்காக எதையும் செய்யத் துணிய வேண்டும் ஆனால் சீமான் அதற்கு எதிர்மாறாக இருக்கின்றார் இன்று இதைத் செய்பவர் நாளை கருணா, கருணாநிதியுடனும் சேர்ந்துவிட்டு ராஜதந்திரம், அவர்கள் வழியில் போய் அவர்களை திருத்த வேண்டும், துரோகம் செய்தவர்கள் என்பதற்காக வருந்தினால் அனைத்துச் செல்ல வேண்டும் என்று பல விளக்கங்களை பல்தெரிய கூறினாலும் கூறலாம்.

சரி இப்பொழுது ஏன் இதையெல்லாம் சொல்கின்றீகள்ள் அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என்றுதானே கேட்கின்றீர்கள்.

தமிழர்களை இனப்படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியில் இருக்கும் குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என பேட்டியளித்தார் அதன் பிறகு பல கண்டணங்கள் எழுந்த பின்பும்  அந்த கருத்துக்கு இன்றுவரை மன்னிப்பு கேட்கவேயில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகளையும், தேசியத் தலைவரையும் தலைவராக அறிவித்து அரசியலுக்கு வந்த சீமான் இன்று அந்த அதியுச்ச போராளிகளை மிக கேவலமாக விமர்சனம் செய்த குஷ்புவுடன் ஜோடிசேர்ந்து நடிகர் விஜய்  தந்தை அவர்களின் படத்தில்  படம் நடிக்கவுள்ளார். 

பாலச்சந்திரனை குழந்தை போராளியாக சித்தரித்த புலிப்பார்வை படத்தை ஆதரித்தார், இன்று புலிகளையே கேவலமாக பேசியவர்களுடன் சேர்ந்து நடிக்கின்றார், ஆக நாளை மேற்சென்னவைகள் நடந்தாலும் நீங்கள் வேடிக்கைதான் பார்க்க வேண்டும் சீமான் அதற்கும் தனக்கு ஏற்றால்போல் ஒரு விளக்கம் சொல்லுவார்.

தமிழகத்தை பொறுத்தவரை சீமானுக்கு முதல் எதரியே காங்கிரஸ்தான் குஷ்பு அந்த கட்சியில் இருப்பதோடு, தன்னுடைய தெய்வங்கள் என வணங்கும் போராளிகளை கேவலமாக பேசியவர்களுடன்சீமான்  கைகோர்ப்பது எதற்காக அப்படிப்பட்ட ஒரு அரசியலோ அல்லது பணமோ தேவைதானா?

குஷ்பு அன்று கூறிய கருத்துக்கு பின்னர் இன்றுவரை வெளிநாடு நிகழ்ச்சிகள் எதுவும் கலந்துகொள்ளவில்லை இன்றும் புலம்பெயர் தமிழர்கள் குஷ்பு கலந்துகொண்டால் அந்நிகழ்ச்சியை உண்டு இல்லை என செய்வதற்கு காத்திருக்கின்றார்கள். ஆனால் சீமானோ சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று தமிழர்களுக்கு எதிரானவர்கள் கூறிய கருத்துக்களை தான் கூற முற்படுகின்றார்.

ஒரு வேளை இந்த கட்டுரைக்கு பின்பு கையெழுத்திடப்பட்ட அந்த படத்தை தவிர்த்தாலும் தவிர்க்கலாம் அல்லது போங்கடா நான் அப்படித்தான் நடிப்போன் என நடித்தாலும் நடிக்கலாம் என் அண்ணன் என்ன செய்தாலும் வேடிக்கை மடடும்தான் பார்ப்போம் இதையெல்லாம் தட்டி கேட்க மாட்டோம் என அவர் தம்பிகள் சொல்வார்களா? அல்லது தட்டிக் கேட்பார்களா?

பார்க்கலாம் கொள்கையா அல்லது குஷ்புவா?

Leave a Reply