“செக்கச் சிவந்த வானம்” படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார் நடிகர் சிம்பு. தனது பழைய பாணிகளைத் தூக்கி எறிந்துவிட்டு கடுமையான உழைப்பு, சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என, ஒரு புது சிம்புவாக களமிறங்கியுள்ளார்.

அந்த வகையில் சிம்புவின் அதிரி புதிரியான புதிய கூட்டணியாக வெங்கட் பிரபு இயக்கம், சுரேஷ் காமாட்சி தயாரிப்பு என்ற செய்திதான் கோடம்பாக்கத்தை இன்று பரபரப்பாக்கி வைத்திருக்கிறது. இந்த புதிய கூட்டணி இணையும் படத்திற்கு “மாநாடு” என பெயர் சூட்டியிருக்கின்றனர்.

“வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்” தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் முழுக்க முழுக்க முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்திலும்… களத்திலும் சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு விரைவில் தொடங்க இருக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.