புதிய பாய்ச்சலோடு புறப்பட்டிருக்கிறார் சிம்பு. அடுக்கடுக்கான புகார்களையும் தாண்டி வெற்றி கரமாக மணிரத்னம் இயக்கத்தில் “செக்கச் சிவந்த வானம்” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் மற்றும் பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் இப்படம் சிம்புவிற்கு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

இதனால் சிம்புவின் தீவிர ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்திற்கு நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியானால் சிம்புவுடன் இணைவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை “வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்” சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.