இயக்குநர் பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் “சீமராஜா”. இந்தப் படத்தை “24ஏ.எம் ஸ்டூடியோஸ்” சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இந்நிலையில், சமந்தா மற்றும் சூரியுடன் படத்தின் டப்பிங் பணிகள் முடிவுக்கு வந்ததாக இயக்குநர் பொன்ராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் மிரட்டும் வில்லியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்ரன் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.