ஸ்ரீதேவி கனவிலும் நினைக்காத ஒரு விஷயம் விரைவில் நடக்கப் போகிறது. ஏற்கனவே திருமணமாகி அர்ஜுன் கபூர், அன்சுலா கபூர் ஆகிய இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான போனி கபூரை நடிகை ஸ்ரீதேவி திருமணம் செய்தார்.

தனது அம்மா மோனாவின் வாழ்க்கையை கெடுத்த ஸ்ரீதேவியை நடிகர் அர்ஜுன் கபூருக்கு சுத்தமாக பிடிக்காது. அவர் ஸ்ரீதேவியுடன் பேசியது இல்லை. மேலும் தந்தை மீது உள்ள கோபத்தால் அவர் பேச்சையும் கேட்பது இல்லை.

அர்ஜுன் ஸ்ரீதேவி இறந்த பிறகு அவரது உடலை வாங்க போனி கபூர் அல்லாடியபோது அவருக்கு துணையாக இருக்க துபாய் கிளம்பிச் சென்றார் அர்ஜுன் கபூர். இறுதிச் சடங்கு தனது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வந்து ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார் அர்ஜுன். இறுதி ஊர்வலத்தில் ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் அர்ஜுனும் இருந்தார்.

குஷி ஸ்ரீதேவி இருக்கும்போது அவரின் மகள்கள் ஜான்வி, குஷியை அர்ஜுன் கண்டுகொண்டது இல்லை. ஆனால் அவர் இறந்த பிறகு அவர்கள் மீது பாசமாக உள்ளார். பாசம் தங்கைகள் ஜான்வி, குஷிக்கு ஆதரவாக இருக்க அனைவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்க முடிவு செய்துள்ளாராம் அர்ஜுன்.

அர்ஜுனின் தங்கை அன்சுலாவும் ஜான்வி, குஷியை தனது சொந்த தங்கைகளாகவே ஏற்றுக் கொண்டுவிட்டார். பாலிவுட் ஸ்ரீதேவி இருந்தபோது பகையுடன் இருந்த அர்ஜுன் தற்போது ஆளே மாறிப் போய் ஜான்வி, குஷியை பாதுகாப்பது பாலிவுட் பிரபலங்களை வியக்க வைத்துள்ளது.

வேதனை தாயை இழந்து அர்ஜுனும், அன்சுலாவும் தனியாக நின்று தவித்தார்கள். அந்த வேதனை ஜான்வி, குஷிக்கு ஏற்பட வேண்டாம் என்று அர்ஜுன் நினைக்கிறாராம்.

TOP MODELS 20

Picture 1 of 19

Leave a Reply