அடுக்கடுக்காக பாலியல் புகார்களைக் கூறி தெலுங்கு பட உலகினரை அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதுவரை தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபலங்களை மட்டுமே சர்ச்சையில் சிக்கவைத்து வந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் பக்கம் திரும்பியுள்ளார்.

அவரின் பாலியல் புகாருக்கு முதலில் பலியானவர் இயக்குநர் முருகதாஸ் தான். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்த் திரையுலகத்தின் மயக்கம் தெளிவதற்குள் அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் அம்மணி.

 

 

அந்த பதிவில், நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடன் ஹோட்டலில் இருந்ததாக கூறியுள்ளார். CCL கிரிக்கெட் போட்டி பார்ட்டியின் போது ஹைதராபாத் பார்க் ஹோட்டல் ரூமில் எதோ நடந்ததாக அவர் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், “கிளப்பில் நடனம் ஆடும்போது எனக்கு வாய்ப்பு வாங்கிதருகிறேன் என கூறினீர்கள் நினைவிருக்கிறதா?” எனவும் ஸ்ரீகாந்த்தின் போட்டோவை பதிவிட்டு பேஸ்புக்கில் கேட்டுள்ளார்.

இன்னும் யார் யார் மீது பழிபோட போகிறாரோ? என்கிற பீதியில் உறைந்து போயிருக்கிறது தமிழ் திரையுலகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.