ஏ.ஆர். முருகதாஸுக்கு இருக்கிற பிரச்சனை போதவில்லை என்று ஸ்ரீ ரெட்டி வேறு ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

சர்கார் பட போஸ்டரில் விஜய் தம்மடித்தது பெரிய பிரச்சனையாகியுள்ளது. இந்த பிரச்சனை குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளது. விஜய், முருகதாஸ், சன் பிக்சர்ஸிடம் தலா ரூ. 10 கோடி கேட்டு தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு குறித்து பதில் அளிக்குமாறு அவர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.

ஒரு சிகரெட் காட்சிக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையா என்று விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

தற்போது எல்லாம் விஜய் படங்கள் என்றாலே பிரச்சனை தானாக தேடி வருகிறது. சர்கார் பிரச்சனை குறித்து பேசிய டி. ராஜேந்தரோ, விஜய் ஒரு தமிழன் என்பதால் டார்கெட் செய்யப்படுவதாக கூறினார்.

சர்கார் பிரச்சனையை தீர்க்க முருகதாஸ் முயற்சி செய்து வரும் நிலையில் தெலுங்கு திரையுலகை அதிர வைத்து வரும் நடிகை ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

ஹாய் தமிழ் இயக்குனர் முருகதாஸ் ஜி…நலமா? கிரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா?? வெளிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். பட வாய்ப்பு அளிப்பதாக வாக்களித்தீர்கள். ஆனால் நமக்கு இடையே நிறைய….இதுவரை நீங்கள் எனக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை…நீங்களும் சிறந்தவர் சார்… என்று ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

ஆனால் நமக்கு இடையே நிறைய என்று கூறி அந்த வாக்கியத்தை முடிக்காமல் புள்ளிகள் மட்டும் வைத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ ரெட்டி ஒரு வில்லங்க பார்ட்டி என்பதால் ஆளாளுக்கு யூகிக்கத் துவங்கிவிட்டனர்.

தமிழ் இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் என்றும் ஸ்ரீ ரெட்டி அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முருகதாஸ் தனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று ஸ்ரீ ரெட்டி போஸ்ட் போட்டுள்ளது தேவையில்லாத பேச்சுகளுக்கு இடம் கொடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.