யார் யார் எல்லாம் எச்.ராஜாவை கண்டித்தார்களோ அனைவரும் வரிசையில் வந்து அவரிடம் பாடம் கற்கட்டும்.

உண்மையில் ராஜாவை கண்டு இவர்கள் அனைவருக்கும் பயம் உண்டு, காரணம் தனித்து நின்று எவ்வித மக்கள் பலமோ அல்லது ஆள் பலமோ அல்லாமல் அதிகார பலத்தை அதுவும் மத்தியில் வைத்துக்கொண்டு இந்த ஆட்டம் போடும் ராஜாவையே அடக்க துப்பில்லை இவர்களுக்கு ஆனால் மைக்குக்கு முன்னால் நின்று அதை வெட்டுவேன் இதை வெட்டுவேன் என மற்றவர்கள் காது வெடிக்க கத்துவதற்கு மட்டும் தயக்கம் இல்லை.

9 ஆண்டுகள் கடந்தும் எவ்வித செயற்பாட்டிலும் இல்லாத விடுதலைப்புலிகளினால் ஆபத்து உண்டு என்று தடைசெய்திருக்கும் இந்திய அரசுக்கும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழக அரசும் இன்று ஒருவன் உடைப்பேன் என்று கூற அதை மற்றொருவன் செய்து முடித்துவிட்டிருக்கின்றான், ஆனால் இவர்களுக்கு தடை விதிக்கவோ அல்லது அந்த கட்சிக்கு தடை விதிக்க சொல்லவோ எவருக்கும் திறன் இல்லை.

ஆனால் பல பத்தாண்டுகளாக இலங்கை தூரதகத்தை உடைப்பேன், தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் உள்ள முகாம்களை உடைத்து விடுதலை கொடுப்பேன்எ ன மைக்கே வெடிக்கும் அளவுக்கு அனைவரும் பேசியிருக்கின்றார்கள் ஆனால் இதுவரை ஒரு துரும்பையும் உடைத்தது கிடையாது.

ஆனால் சொன்னதை ஆள் வைத்தாவது செய்த  ராஜாவுக்கு உள்ள தில் இவர்களுக்கு கிடையவே கிடையாது, சரி இப்பொழுது உடைத்தாகிவிட்டது ராஜாவை என்ன செய்து கழித்துவிட்டீர்கள், உங்களால் உங்களையே காத்துக்கொள்ள முடியாது என்றதே உண்மை.

இப்பொழுதாவது ராஜா போல் எதையாவது உடைத்துக் காட்டுங்கள் இல்லை எதுவும் முடியாவிட்டால் ஆளுக்கு ஒரு மண்பானை வாங்கி ரோட்டில் போட்டு உடையுங்கள்.

இப்பொழுது செய்து என்னவென்றால் உடைத்தவனை கட்டி வைத்து அடித்தார்களாம் அப்போ உடைக்க தூண்டிவிட்டவனை? இதில் ராஜாவை நேரம் குறித்து வந்து உடைக்க வேண்டுமாம் விட்டால் பாக்கு வெத்தள வைத்து அழைப்பு விடுக்க வேண்டும் என்று கேட்டாலும் கேட்பார்கள் ஏனென்றால் இவர்கள் யாரும் எதிர்த்து உடைக்கப்போவது இல்லையே.

Leave a Reply