ஆபாசப் படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சன்னி லியோன் தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, இந்திய மொழிகளின் சினிமாக்களில் நாயகியாக நடித்து வருகிறார்

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் ‘வீரமாதேவி’ சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை சன்னி லியோன். இப்படத்தின் மூலம் அவரது இமேஜ் மாறும் எனக் கூறப்படுகிறது.

சரித்திரப் படமாக உருவாகும் இப்படத்தில் சன்னி லியோன் ‘வீரமாதேவி’ கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்துக்காக, வாள் சண்டை மற்றும் குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு நடித்திருக்கிறார் சன்னி.

இந்தப் படத்தில் நாசர், நவ்தீப் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட இருக்கிறது. ‘வீரமாதேவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே 18-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

Leave a Reply