உலகமே மாறி வருகிறது. மேற்கத்திய கலாச்சாரம் மேல் பற்றுக்கொண்டு அனைவரும் அந்த மாதிரியான உடை, நடை, உணவுப் பழக்கவழக்கத்திற்கு மாறி வருகின்றனர். இங்கு சிலர் காதலர் தினத்துக்கே தடைவிதிக்கவேண்டும், கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் என்று குமுறிக்கொண்டிருக்கும்போது, நாம் ஒரு விசயத்தைப் பற்றி நன்கு யோசிக்கவேண்டும். உல்லாசம் என்ற வார்த்தையே கெட்டவார்த்தையான பிறகு அந்த வார்த்தையை வேறெதிலும் பயன்படுத்தமுடியாததாகி விட்டது. எனினும் இன்பமயமாக நண்பர்களுடன் கொண்டாடி மகிழும் சில விடுதிகள் நம் தமிழகத்திலேயே இருக்கின்றன. விடுமுறை காலங்களில் வாரஇறுதிகளில் இங்கெல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. வாரம் முழுவதும் இறுக்கமான மனநிலைக்கு சென்றுவிடுகின்ற இளைஞர்கள் இந்த இடத்துக்கு சென்று தங்களை புத்துணர்ச்சியடைந்துகொள்கின்றனர். சரி இப்போது தமிழகத்தில் எங்கெல்லாம் இந்த உல்லாச விடுதிகள் இருக்கின்றன என்று பார்க்கலாமா?

Sparks

Picture 1 of 6

ஸ்பார்க்ஸ், சவேரா சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டலில் ஸ்பார்க்ஸ் நைட் கிளப் அமைந்துள்ளது. இங்கு உள்ள நடனத்தளம் மிகப்பெரியதாக இருப்பதால் டிஸ்கோதேக் தேடி சென்னை வரும் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

Leave a Reply