இது நம்புவது மிகவும் கஷ்டமான விடயம்தான் ஆனால் கசிந்துள்ள ரகசியம் அப்படிப்பட்டது. ஆம் பன்னீர்செல்வத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு 117 எம்.எல்.ஏக்கள் தேவை ஆனால் அவரிடம் இருப்பதோ வெறும் 5ல் இருந்து அதிகபட்சமாக 10வரைதான் இதற்கே 8 நாள்கள் முடிந்துவிட்டது இப்படி 117 பேரையும் இழுத்து எடுப்பதற்குள் மக்கள் பொறுமை இழந்து பன்னீர்செல்வத்தை பன்னீர் டெவில் சமைத்ததாலும் சமைத்துவிடுவார்கள்.

இவர் 117 பேரையும் இழுத்துவரும்வரை ஆளுனரும் காத்திருக்க வேண்டும் என்பது விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது. அதுமட்டுமல்ல அத்தனை எம்.எல்.ஏக்கள் வரமாட்டார்கள் என்பதும் பன்னீர்செல்வத்திற்கு நன்கு தெரியும் அப்படியென்றால் அவர் எதற்காக இப்படி செய்கின்றார்கள்.
தமிழர் விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக எது நடந்தாலும் மகிழ்ச்சி என்றே சதி செய்து காத்திருக்கின்றார்கள். அதாவது பன்னீர்செல்வம் முதல்வராவது அல்லது தேர்தல் வருவது அல்லது தி.மு.க ஆட்சி அமைத்தாலும் கூட பரவாயில்லை ஆனால் அதிமுக நிச்சயம் உடைய வேண்டும் என்பதே அது.

சசிகலாவிடம் கட்சியும் ஆட்சியும் சென்றால் இனி தமிழத்தில் எதற்கும் அவரிடமே போய் நிற்க வேண்டும் மேலும் அவர் அவருக்கு பின் என பலர் வரிசை கட்டி நிற்கின்றார்கள். ஜெயலலிதாவின் போக்கும் குணமும் அப்படியே இவரிடமும் உள்ளது எனவே அப்படி கடும்போக்கானவரை சமாளிக்க முடியாது என்பதும் அவர் ஒரு தமிழர் என்பதும் முக்கியம்.
பன்னீரும் தமிழர் என்றாலும் அவர் கடும்போக்குவாதி கிடையாது அவரை சமாளிப்பது எளிது அதே நேரம் அவர் போனாலும் அவர் பின்பு எவரும் வரமாட்டார்கள்?!!. மேலும் அவர் ஒருபோதும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது நிச்சயம் தி.மு.க, காங்கிரஸ், ப.ஜ.க போன்ற ஏதாவது கட்சிகளின் தயவு நிச்சயம் வேண்டும்.

இதில் அதிக எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது தி.மு.காதான் நிச்சயம் தி.மு.க தன்னுடை ஆதரவை பன்னீருக்கு கொடுக்கும் அவருக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள பொறுப்பு 30 எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்து வந்தால் போதும் மிச்ச ஆதரவை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

சில மாதங்கள் அல்லது வருடம் பன்னீரை ஆட்சி செய்ய விடுவது, இந்த இடைப்பட்ட காலத்தில் சசிகலா பக்கம் உள்ள ஏனைய எம்.எல்.ஏக்களை தி.மு.க கட்சிக்கு தாவ செய்வது பின்பு பன்னீருக்கு நெருக்கடி கொடுத்து பெரும்பான்மையை இழக்கச் செய்து தி.மு.க ஆட்சியை நேரடியாக முழுமையாக கொண்டுவருவது.

இதற்கெல்லாம் காரணம் தமிழக வரலாற்றில் கருணாநிதி நீங்காது இடம்பிடிக்கவே இந்த ஏற்பாட்டை தி.மு.க செய்துவருகின்து. கருணாநிதி மரணிக்கும்பொழுது அவர் முதல்வராக இருக்க வேண்டும் என்பதே அது.

அதற்கு காரணம் மரணிக்கும் போது ஆட்சியில் முதல்வராக இருந்தால் மட்டுமே மெரினாவில் இடம் பிடிக்க முடியும் தமிழக பாடப்புத்தகத்திலும் இடம்புடிக்க முடியும்??!!!. அதிமுக இருந்தால் நிச்சயம் மெரினாவில் இடமும், அரசு மரியாதையும், வராலாற்றில் நீங்கா இடமும் கிடைக்காது. தான் மரணிக்கும்பொழுது கூட பதவியில் இருக்க வேண்டும் என்ற கருணாநிதியின் ஆசையும்தான் காரணம். அதன்பிறகு ஸ்டாலின் முதல்வர், ஒரு வேளை இந்த முறை இல்லாவிட்டாலும் அடுத்த தேர்தல் நிச்சயம் தி.மு.கவிற்கு ஆதரவாக இருக்கும். ஒருவேளை கருணாநிதியால் முதல்வராக அவரது உடல் ஒத்துழைக்க முடியாவிட்டால் மட்டும் ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பபு கிடைக்கும் ஸடாலினும் கருணாநிதியின் விருப்பத்தை அதிகாரத்தை வைத்து நிறைவேற்றுவார்.

ஆனால் இது தி.மு.காவின் திட்டம் இதற்கிடையில் பி.ஜே.பி, காங்கிரஸ், இடது, வலது என பல கட்சிகள் அடுத்த தேர்தல் ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றது. அடுத்த தேர்தல் ஒன்று வரும்பொழுது கடந்த தேர்தலில் இருந்த அதிமுக என்ற கட்சி இருக்கக்கூடாது என் ஒரே நோக்கத்தை அனைத்து கட்சிகளும் எழுதப்படாத கொள்கையாக தற்போதைக்கு கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர் விரோத சுப்ரமணிய சாமி சசிகலாவை ஆதரிப்பதும், சுப்ரமணிய சாமி தவிர்த்த அனைத்து தமிழர் விரோத சக்திகளும் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதால் மக்கள் மிகுந்த குழப்பத்திலேயே வைத்துள்ளது, ஆனால் பா..கவில் இருக்கும் சுப்ரமணிய சாமி உண்மையில் சசிகலாவை ஆதரிக்கவில்லை பா.ஜ.கவின் சுப்ரமணிய சாமி சசிகலாவிற்று ஆதரவு கொடுக்கின்றார் என்று தமிழர்கள் அறிந்தால், பொறுக்கிகள் என தமிழர்களை அசிங்கப்படுத்திய சுப்ரமணிய சாமியுடன் கூட்டா என சசிகலாவை தானாகவே ஓரங்கட்டுவார்கள் என்ற திட்டத்தின் ஒரு பகுதியே சுப்ரமணிய சாமி வாண்டடாக வந்து ஆதரவு தெரிவிக்க வைத்திருக்கின்றார்கள்.

ஒருவேளை பன்னீர் ஆட்சிக்கு வந்தால் சில வருடத்திலேயே சசிகலாவையே முதல்வராக்கியிருக்கலாமே என்று நிச்சயம் மக்கள் சிந்திப்பார்கள் அதற்கான நாட்கள் விரைவில் வரும்.

இப்பொழு சசிகலாவை எதிர்ப்பவர்கள் நிச்சயம் தமிழர் நலனுக்காகவே அல்லது தமிழ்நாட்டின் நலனுக்காகவே பன்னீரை ஆதரிக்கவில்லை என்பதை மட்டும் அனைவரும் நினைவில் கொள்ளுங்கள். பன்னீர்செல்வம் முதல்வர் ஆனாலும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அது நிரந்தரம் அல்ல, சசிகலா என்ற தமிழரிடமிருந்தும்,பன்னீர்செல்வம் என்ற தமிழரிடமிருந்தும் நிரந்தரமாக அதிகாரங்களை பறிப்பதே இவர்களின் நோக்கம்.

இப்பொழுது பன்னீர்செல்வம் பக்கம் வந்திருப்பவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் விசுவாசிகள் கிடையாது. இவர்கள் உண்மையான விசுவாசிகள் என்றால் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட அன்றே பதவி விலகி அல்லது கட்சியை விட்டு விலகி மக்களிடம் உண்மையை தெரிவித்திருப்பார்கள்.

அதே போல் அன்று அத்தை மரணத்தில் சந்தேகம் உள்ளது என்ற தீபா இன்று மரணத்தில் சந்தேகமே இல்லை ஆனால் உயில் விபரம் மட்டும் தெவை என்கின்றார், அன்று ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்ற பன்னீர்செல்வம் உட்பட்ட ஆதரவாளர்கள் இல்லை இல்லை சந்தேகம் இருக்கின்றது என்கின்றார்கள்.

மக்கள் மத்தியில் மரணத்தில் உள்ள சந்தேகத்தை வைத்து இவர்கள் லாபம் அடையப்பார்க்கின்றார்களே தவிர இவர்கள் ஜெயாவின் விசுவாசிகள் அல்ல.

விழித்திருங்கள் நிச்சயம் பல திருப்பங்களை தமிழக அரசியலில் சந்திக்க காத்திருங்கள் ஆனால் அந்த திருப்பங்கள் அனைத்தும் மக்களுக்கு சாதகமானது என்று எதுவும் இருக்காது.

ஆனால் திருப்பங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் பஞ்சங்கள் இருக்காது மேலும் அனைத்தையும் இப்பொழுது கூறினாலும் நிச்சயம் நீங்கள் நம்பபோவதும் இல்லை ஏனெனில் ஆச்சரிய சம்பவங்கள் நடந்தால் மட்டுமே மக்கள் நம்புவார்கள் எனவே அதிர்ச்சிகளுக்காக காத்திருங்கள்.

247தமிழ்.com இணையத்திற்காக -அமரன்

Leave a Reply