சதியில் வீழ்ந்துபோன பன்னீர்செல்வத்திற்கு கிடைத்தது ஆப்பு மட்டும்தான், எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பி, தொலைக்காட்சி, இணையம் ஊடாக சசிகலா தரப்புக்கு எதிராக பரப்பப்பட்ட வதந்திகளை மக்கள் நம்பும்படியாக இருந்ததை நம்பி சதி செய்ய துணிந்து இன்று அனைத்தையும் இழந்து நிற்கின்றார் பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இனி பன்னீர்செல்வத்தை சீண்ட மாட்டார்கள்.

ஆனால் மீண்டும் சட்டசபையில் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர கடும்பாடுபடுவார்கள் அதற்கு எம்.எல்.ஏக்களுக்கு கோடி கோடியாக விலைபேசப்படும்.

ஒருவேளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் தி.மு.க அனைத்து எம்.எல்.ஏக்களையும் வாக்கு செலுத்த அனுமதிக்காமல் மீண்டும் தேர்தல் அமையும் வகையில் வாக்கு செலுத்தும் அல்லது அதற்கு வழி வகிக்கும்.
சசிகலா சிறைக்கு சென்ற பின்பு சசிகலாவை இப்படி பழிதீர்த்துவிட்டார்கள் என்று சசிகலாவிற்கு  மக்களின் ஆதரவு  பெருகி வருகின்றது. மீண்டும் தேர்தல் வைத்தாலும் பெரும்பான்மையுடன் மீண்டும் அதிமுக வெற்றி பெறும்.

இம்முறை சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் இருவரும் முதல்வர் ஆக மாட்டார்கள் என்று தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது 247தமிழ் இன்று அது உண்மையாகிவிட்டது.

அதே போல் பன்னீர்செல்வம் நிச்சயம் முதல்வர் ஆக மாட்டார் என்று 247தமிழ் அடித்துக்கூறியிருந்தது அதுவும் இப்பொழுது நடந்துள்ளது. அந்த செய்திகளை எமது இணைத்தில் முகப்பு பக்கத்தில் உள்ள செய்திகளில் பார்த்து உறுதி செய்யலாம், நடக்கப்போவதை நாம் வெளியிட்டபோது பலர் சிரித்து நக்கலடித்ததோடு கடும் தெனியில் திட்டியும் இருந்தார்கள் ஆனால் அனைத்தும் நடந்து அவர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது.

தொடர்ந்தும் அதிரடி நிறைந்த உண்மையான செய்திகளை வெளியிட உள்ளோம். அடுத்த செய்தியிலேயே அடுத்த அதிரடி செய்திக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது அதை விரைவில் எதிர்பாருங்கள். அடுத்த அதிரடி செய்தி சசிகலாவின் மீள் வரவு தொடர்பானது?! தமிழ்நாட்டிற்கு அதிரடி திருப்பங்கள் காத்திருக்கின்றது.

247தமிழ்.com

Leave a Reply