தற்போதைக்கு தமிழ் சினிமாவில் “இவர் தொட்டதெல்லாம் தங்கம்” என்று சொன்னால் அது நயன்தாரா-விற்கு தான் பொருந்தும். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “அறம்”, அடுத்து வரவுள்ள “கோலமாவு கோகிலா” என தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் இப்போதும் பெரிய நடிகர்களின் முதல் சாய்ஸ்-ஆக நயன்தாரா தான்.

அவரைப் பார்த்து தான் தற்போது திரிஷா-வும் கதாநாயகியை மையப்படுத்தும் படங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். “நாயகி” படத்தை தொடர்ந்து “மோகினி”, “கர்ஜனை” என நடித்து வரும் இரண்டு படங்களுமே ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் தான்.

நடிகை த்ரிஷா, “நாயகி” படத்தை தொடர்ந்து “மோகினி” உள்ளிட்ட சில படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்தார். அது மட்டுமல்லாமல், விஜய்சேதுபதி நடிப்பில் “96” படத்தில் நடித்து வருகிறார்.

ஆனாலும் நயன்தாரா போல தனக்கு ஹைப் இல்லையே என மிகுந்த கவலையில் இருக்கிறாராம் திரிஷா. எப்படியாவது, லேடி சூப்பர் ஸ்டார் இடத்தை அடைந்தே தீருவது என முடிவெடுத்து வித்தியாசமான கதைகளைக் கேட்டு வருகிறாராம். விரைவில் அசத்தலான அறிவிப்பு இருக்கும் என்று அவரது வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.