இயக்குநர் ஆர். மாதேஷ் இயக்கத்தில், திரிஷா நடித்திருக்கும் படம் “மோகினி”. “பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்” சார்பில் லக்‌ஷ்மன் தயாரித்திருக்கும் இத்திரைப்படம் வரும் ஜூலை 27 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

முழுக்க காமெடியுடன் கூடிய திகில் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் மோகினி, வைஸ்ணவி என இரண்டு வேடங்களில் திரிஷா நடித்திருப்பதோடு, அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். திகில் படம் மற்றும் பேய் இது இரண்டையும் வேறு ஒரு பாணியில் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கும் இப்படம் முன்னணி ஹீரோக்களின் படங்களைப் போல ரொம்ப பிரம்மாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரு மாநிலங்களிலும் சுமார் 600 திரையரங்கங்களில் வெளியாகும் இப்படம் தமிழிலும் ஏராளமான திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால், அதே தினத்தில் வெளியாக இருக்கும் “ஜுங்கா” படத்திற்கு குறைந்த அளவே தியேட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் “ஜுங்கா” திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த நேரத்தில், தியேட்டர் கிடைக்காமல் போயிருக்கும் இந்த செய்தியால் விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.