தனது நடிப்பில் கடைசியாக வெளியான எந்த படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் நடிகை திரிஷா கலந்து கொள்ளவே இல்லை. தன்னை ஒரு லேடி அஜித் போல கற்பனை செய்துகொண்டு, எந்த பட விழாவிலும் கலந்து கொள்ளாமல் போக்குக் காட்டி வந்தார். ஆனால், அவரது படங்கள் எதுவுமே எதிர்பார்த்தபடி வெற்றியைத் தரவில்லை. இதனால் சில தயாரிப்பாளர்கள், மற்றும் இயக்குநர்கள் திரிஷாவின் மீது கோபமாக இருந்து வந்தனர்.

இதனால் தான் அவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது, என்றும் சிலர் கூறினார்கள். தற்போது, திரிஷாவும் தன் தவறை உணர்ந்தவராக விழாக்களில் கலந்து கொள்வது என முடிவு செய்திருக்கிறாராம்.

முதற்கட்டமாக திரிஷா தற்போது நடித்திருக்கும் “மோகினி” திரைப்படத்தின் புரமோஷனுக்கு கலந்து கொண்டிருக்கிறார். இனிமேல் தான் நடிக்கிற எல்லா படத்தின் புரமோஷனுக்கும் செல்லவும் திரிஷா முடிவெடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.