நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஒரு காலகட்டத்தில் முன்னணி நாயகியாக விளங்கியவருக்கு, இப்போது சொல்லிக்கொள்ளும் படி படங்கள் ஒன்றும் அமையவில்லை.

எப்படியாவது விட்ட இடத்தை பிடித்தே ஆகவேண்டும் என்று கவனமாக அடுத்தடுத்த படங்களை தேர்ந்தெடுத்து வருகின்றார். இதில் பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாகவே தான் உள்ளது.

தற்போது அவர் அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் யுனிசெஃப் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொல்வதற்காக சென்றிருக்கிறார்.

இந்நிலையில் திரிஷா சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக அவர் அணிந்திருக்கும் வித்தியாசமான உடை எல்லோரையுமே கவர்ந்திருக்கிறது. ஆண்கள் அணிகிற வேட்டி, சட்டை போல இருக்கும் அந்த உடையில் திரிஷா எப்போதையும் விட அழகாகத் தெரிவதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.