டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி எனப்படும் திவ்யதர்ஷினி. தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் மீண்டும் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.

2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட தமிழ் தொலைக்காட்சி பெண் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை டைம்ஸ். இந்த பட்டியலில் டிடிக்கு தான் முதல் இடம் கிடைத்துள்ளது.

அதிகம் விரும்பப்பட்ட தொலைக்காட்சி பிரபலமாக தேர்வு செய்யப்பட்டதில் டிடி மகிழ்ச்சியில் உள்ளார். மக்களுக்கு என்னை பிடிக்கும் என்று தெரியும், ஆனால் விரும்பப்பட்டவளாக இருப்பது தெரியாது என்கிறார் டிடி.

2 ஆண்டுகளுக்கு முன்பு நான் டிவியில் இருந்து பிரேக் எடுத்தேன். நான் பிரேக் எடுத்ததற்கான காரணம் மக்களுக்கு தெரியாது. என் முழங்காலில் பாதிப்பு ஏற்பட்டு நான் இனி நடக்கவே முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் நான் குணமடைந்து நன்றாக நடக்கிறேன் என டிடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply