ஆம் உண்மைதான் கிடைத்திருக்கும் தகவல்கள் அப்படிப்பட்டவை. தமிழகத்தில் பெரும் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தமிழத்தில் நிரந்தரமாக ஒரு தமிழரை முதல்வராக கொண்ட கட்சி உருவாகியுள்ளதை தமிழர் விரோத சக்திகள் விரும்பவில்லை என்பதே அப்பட்டமான உண்மை.

பன்னீர்செல்வத்திற்கு அனைவரும் ஆதரவு தருவது போல் தோன்றினாலும் நிச்சயம் அவரை முதல்வராக வர விடமாட்டார்கள், அதே வேளை சசிகலாவிற்கும் பெரும்பான்மையை நிரூபிக்க முட்டுக்கட்டை போட்டு அவரையும் முதல்வராக வர விடமாட்டார்கள்.

நடுவில் நின்று கருத்து சொல்பவர்களுக்கும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் தேவையானது ஒன்றுதான் அது மறுதேர்தல்.
இருவரும் பெரும்பான்மையை நிரூபிக்கமுடியாமல் போகும் தருவாயில் தேர்தல் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகிவிடும். இதில் எப்படியாவது தேர்தல் அன்றி ஆட்சியை பிடிக்க தி.மு.க பெரும் முயற்சி செய்து வருகின்றது ஆனால் பி.ஜே.பி காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் மறு தேர்தலையே நோக்காக கொண்டு காய் நகர்த்தி வருகின்றார்கள்.

அதிமுகாவை உடைத்து, கட்சிக்கு பெரும் அவமானத்தை சேர்த்து மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்கச் செய்து பின்பே பெரும்பான்மையை நிரூபிக்கும் போட்டியை நடத்த சதிகாரர்கள் திட்டம் தீட்டுகின்றார்கள்.

மக்கள் செல்வாக்கை இழந்த கட்சி மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க இயலாது என்பது அனைவருக்கும் தெரியும் இதன் ஊடாக தமிழர் விரோத சக்திகள் ஆழமாக தமிழகத்தில் வேர்பரப்ப முனைகின்றார்கள்.
அதிமுகாவிற்கு இருக்கும் வாக்குகள் சிதறினாலே போதும் சில்லரை கட்சிகள் கூட தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் . அதிமுகாவை உடைத்து மக்கள் செல்வாக்கை தகர்க்கும் பணிகளே தற்போது மிகச்சிறப்பாக நடைபெறுகின்றது.

நெருக்கடியை கருத்தில் கொண்டு சசிகலா தரப்பு வேறு ஒருவரை முதல்வர் பதவிற்கு தற்காலிகமாக கொண்டுவரலாம் அப்பொழுது சில வேளை நிலமை சரிவர வாய்ப்பு உண்டு.

தமிழகமே அழிந்தாலும் தமிழர்கள் ஆட்சி செய்யக்கூடாது என்பதும் இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி தமிழர் தரப்பிடம் இருக்க கூடாது என்பதும் இந்த சதியின் பின்புறம் இருப்பவர்களின் முக்கிய திட்டமாக உள்ளது. தமிழர்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இப்பொழுதும் விட்டுவிட்டால் இனி பற்பல ஆண்டுகளுக்கு தமிழர் ஆட்சியை எதிர்பார்க்க முடியாது.

-247tamil.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.